கீரமங்கலம் வகை சாதுச் செட்டியார்கள் சங்கம் சென்னை கிளை உங்களை அன்புடன் வரவேற்கிறது



       சென்னை கிளையின் வரலாறு


சென்னை கிளை:
நமது முன்னோர்கள் கீரமங்கலம் ஊரை மையமாக வைத்து வியாபாரம் செய்து வந்தனர் பிறகு அருகில் உள்ள ஊர்களான பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, ஆலங்குடி, தஞ்சாவூர் பாப்பநாடு ஆகிய நகரங்களில் குடியேறி வியாபாரம் செய்து வந்தனர். அந்த காலகட்டத்தில் நமது முன்னோர்கள் பள்ளிப்படிப்பை தாண்டி கல்லூரி படிப்புகளுக்கு சென்றவர்கள் மிக சொற்பமே.1960 இல் இருந்து 197 0 களில் அரசு வேலை பார்த்தவர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு இருந்தனர். 1970 க்கு பிறகு நமது முன்னோர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்ததால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு ஒருவரோ அல்லது இருவரோ என கல்லூரி படிப்பிற்கு அனுப்பி வைத்தனர்.1975 க்குப் பிறகு நமது உறவினர்கள் சென்னை மாநகரத்திற்கு வேலை நிமித்தமாக குடியேற தொடங்கினார்கள் அப்பொழுது சிறு குடும்பங்களும் சில தனி நபர்களும் மட்டுமே வசித்துவந்தனர்.

1980க்கு பிறகு படிப்படியாக சென்னையில் குடியேறத் தொடங்கினர். 1990க்கு பிறகு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி வந்த பிறகுதான் நமது உறவினர்கள் பொறியியல் படிக்கவும், வேலை தேடியும்,பணிபுரியவும், தொழில் செய்யவும் சென்னையில் குடியேறத் தொடங்கினார்கள். அதுபோல மருத்துவத்துறை, வங்கித் துறை, அரசு துறைகளில் பதவி பெற்று சென்னையில் வசித்து வருகின்றனர்.

நமது சென்னை கிளை 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நல்ல முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நமது சென்னை கிளையின் ஆறாவது புதிய நிர்வாகிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 6 ம் தேதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு சங்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. பிறகு கடந்த 07.08.2022 அன்று இதே நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது சென்னை கிளையில் 185 குடும்பங்களும், 25 தனி நபர்களும், 10 வெளிநாடு உறுப்பினர்களும், வெளி மாநிலங்களில் 7 ஆக மொத்தம் 227 உறுப்பினர்களாக உள்ளனர்.