இறப்பு சடங்குகள் பற்றி அறிந்தவை
இறந்த உடலுக்கு வாயில் நல்லெண்ணெய் ஊற்றி வெற்றிலைபாக்கு கைகளையும் இணைத்து வைத்து கட்டை விரலை கட்டவும், அதுபோல் இரு கால்களையும். இணைத்து வைத்து கால் கட்டை விரலையும் கட்டவேண்டும். உடலுக்கு மாலை போட்டு பாயை விரித்து தெற்க தலைவைத்து படுக்கவைத்து டுக்கவைத்து காமாட்சி விளக்கை வைத்து தேங்காய் உடைத்து வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து ஊதுபத்தி கொளுத்தி வைக்கவும். (இறந்த நேரத்தை குறித்து வைக்கவும்) உறவு கொளுத்தி சொல்லிவிடவும். (RS. பதி பன்னீர் தெளிக்கவும்) அன்றைய தினம் வாங்கவேண்டிய பொருட்கள் 31/2 மீட்டர் மல்லுத்துணி, மண்பானை தோண்டி 3, கொள்ளிச்சட்டி 1. சீயக்காய், நல்லெண்ணெய் கரைக்க சட்டி 2. நவதானியம். குங்கிலியம், ஒரு சட்டியில் நெருப்பு தணலில் குங்கிலியத்தைப் போட்டு புகைக்கவும், நவதானியங்களை ஊற வைக்கவும். இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு சிறிது நேரத்திற்கு |முன்பாக திருமணம் செய்த உறவின் முறைப்படி கோட்டை கொடுப்பது என்ற வழக்கம் உள்ளது.
கோட்டை கொடுக்க வாங்க வேண்டிய பொருட்கள்
நெல் 1 கிலோ. பன்னீர் பாட்டில் 1. ந.எண்ணெய் 100 மி.லி. சீயக்காய்தூள், வெற்றிலைபாக்கு, பூ, மாலை. வேஷ்டி துண்டு (பெண் என்றால் சேலை) இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்வதற்கு முன்பாக குளிகை நேரம் தவிர்த்து குளிப்பாட்ட வேண்டும்.
குளிப்பாட்டும் முறை :
கணவர் இறந்துவிட்டார் என்றால் மனைவியை இறந்த கணவரின் உடல் அருகில் அமரச்செய்து மஞ்சள் தண்ணீரில் குளிப்பாட்டி அந்த பெண்ணுக்கு மஞ்சள் பூசி. பூ வைத்து பொட்டு வைத்து எண்ணெய் தொட்டுவைத்து குளிப்பாட்டி முடித்துபின்பு பாய்விரித்து பின் உடலை மல் துணியை விரித்து அதில் தெற்கே தலைவைத்து படுக்க வைக்கவேண்டும். பின்பு 1 படி நெல் எடுத்து அதில் கோணி ஊசியில் சொருகிய வெற்றிலையை தலைமாட்டில் வைக்கவும். ஊரப்போட்டு வைத்திருந்த பாளி விதையை பசு மாட்டு சாணத்தால் தட்டி வைக்கவும். இறந்தவரின் மருமகள் வெற்றிலை சொருகிய படிநெல்லை எடுத்து கொண்டு மூன்று முறை சுற்றி இறந்த உடலின் பாதத்தில் சாணத்தை ஒட்டி (ரேகை பதியும்படி) எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உறவின் முறைப்படி அங்காளிகள், பங்காளிகள் ஒற்றுமையாக டல்போட்டு வைத்திருந்த மல் துணியை இணைத்து கட்ட வேண்டும். (முகம் தெரிய) வண்ணான். பரியாரி உதவியுடன் தீச்சட்டி, பந்தம் வெடி தயார் செய்து கொண்டு உடலை எடுத்துச் செல்ல தயார் ஆகவும்.
முச்சந்தியில் குடம் உடைப்பது :
நிறைகுடம் தோண்டியை கொள்ளி வைப்பவர் தோளில் வைத்துக்கொண்டு உடலை மூன்று முறை சுத்தி வரவேண்டும். ஒவ்வொரு முறையும், பரியாரி அரிவாள் நுனியால் தோண்டியில் ஓட்டை போட்டு விடுவார். மூன்றாவது முறை பரியாரி தோண்டியை வாங்கி ஓரமாக உடைப்பார். பெண்கள் சுடுகாட்டிற்கு வரமுடியாத காரணத்தால் இறந்த உடலில் மாத்து விரித்து வாய்க்கரிசி போட்டு அனுப்புவார்கள்.
மயானக்கரையில் செய்வது :
உடல் மயானக்கரைக்கு வந்தவுடன் மூன்று முறை மயானத்தை சுற்றிவரவும், தெற்கு பக்கமாக தலை வைக்கவும். உடலை மட்டும் எடுத்து மூன்று முறை ஊஞ்சல் ஆட்டுவது போல் ஆட்டி விட்டு விறகு கட்டையின் மீது வைக்கவேண்டும். பரியாரி மாத்து விரித்து எல்லோரையும் கூப்பிட்டு நாடு, ஊரு. உறவு எல்லோரும் வாங்க வாய்க்கரிசி செய்யுங்க என்று சொல்லுவார். கடைசியாக ஊர்வரும். நாடுவரும் உறவுவரும். பங்காளிகள் காசு அரிசிபோட்டு முடித்தவுடன் மாத்தை எடுத்துவிட்டு தோண்டி தண்ணீர் எடுத்து சுற்றி வந்து உடைத்தவுடன் கட்டுக்களை கத்தரி கொண்டு அவிழ்த்து விடுவார்கள். உடலில் அணிந்திருந்த பொருள்களை எடுத்து பங்காளி ஒருவரின் கையில் துண்டில் கட்டி கொடுத்து விடுவார்கள். பெண் உடல் என்றால் குப்புற படுக்க வைக்கவேண்டும். விறகுகட்டை, ராட்டி, டயர் அடுக்கிய உடன்உதவியுடன் சந்தனக்குச்சி கொள்ளிக்கட்டையை எடுத்து இடது கையால் கொள்ளி வைக்கவேண்டும்.
அனைவரும் திரும்பி பார்க்காமல் நீரோடைக்கு வந்து தெற்கு பார்த்து மூன்று முறை முங்கி வடதுபுறம் திரும்பி எழுந்து வெளியில் வரவேண்டும். அடக்கம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்து பிறகு நண்பர்கள். பங்காளிகள். மாமன், மைத்துனர் இவர்களுக்கு அன்று இரவு சாம்பார் சாதம் செய்து உணவு பரிமாறுவது முன் காலம் தொட்டு நடைமுறையில் உள்ளது.
இரண்டாம் நாள் சடங்கு காடாத்து :
காலை 10 மணிக்கு மாயானக்கரைக்கு செல்லவேண்டும். எடுத்து செல்லவேண்டிய பொருள்கள் இளநீர்-2. பால் 1/4 லி, வெற்றிலைபாக்கு, பூ. பழம், தீப்பெட்டி, நல்லெண்ணெய், ஊதுபத்தி, சீயக்காய், மஞ்சள், சந்தனம், குங்குமம். விபூதி. பொரி, பட்டிபூ, கதம்பம். சிகப்பு பூ. வெள்ளை பூ. தென்னங்குருத்து 18 கூந்தல் செய்து கொண்டு பலா இலை தொன்னை 7
செய்து கொண்டு வீட்டு வாசலில் சாணத்தால் மெழுகி அதன்மேல் வெள்ளை வேஷ்டியை விரித்து மடித்து சேகரித்த பொருள்களை வைத்துக் கட்டிக்கொண்டு பித்தளைச்செம்பு, மண்வெட்டி, அரிவாள். கலயம், தோண்டி, மஞ்சள்துணி எடுத்துக்கொண்டு மாமன், மைத்துனர்கள், பங்காளிகள். ஒன்று சேர்ந்து ஐயோ ஐயோ ஐயோ என்று எல்லோரும் மூன்று முறை சொல்லிக்கொண்டு பொருள்களை ஒரு வேஷ்டியில் வைத்துக் கட்டவேண்டும். கொள்ளி வைத்தவர் இந்த மூட்டையை மயானம் வரை எடுத்துச்செல்லவேண்டும். பரியாரிக்கு தகவல் சொல்லி வரவழைத்து கொள்ளிபோட்டவருக்கு மொட்டை போடவும். அவர் குளித்து வந்தவுடன் உறவுகளை அழைத்து எரியூட்டப்பட்ட உடல் முழுமையாக எரித்து சாம்பல் ஆனவுடன் நீர் ஊற்றி அனைத்து எலும்புகளை சேகரிக்கவும். (கால் எலும்பு, கை எலும்பு இடுப்பு எலும்பு) முதுகு எனும்பு, தலை எனும்பு அந்த இடத்தில் கும்பம் அமைத்து அந்த எலும்புகளின் மேல் உறவுகளை அழைத்து எண்ணெய் அரப்பு தொட்டு வைக்கவும். பிறகு கொள்ளி வைத்தவர் எண்ணெய் அரப்பு தொட்டு வைக்கவும். அதேபோல் மஞ்சள் கரைத்து ஊற்றவும், பால், இளநீர் ஊற்றவும், சந்தனம் கரைத்து பெரிய பொட்டாக எடுத்து எனும்பை கிழக்கு முகமாக வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து ஊதுபத்தி கொளுத்தி பொரிகளை தூவிவிட்டு வெற்றிலைபாக்கு வைத்து வீட்டில் இருந்து கொண்டுவந்த கொள்ளு அடை போன்றவைகளை
பந்தல் மேல் போட்டு இரண்டாம் நாள் சடங்கு செய்த அடி தெரியாமல் இருக்க முன்பக்கமாக தண்ணீர் ஊற்றி பின்பக்கமாக வந்து விடவும் கொண்டு அரிவாள் முதல்வெட்டி, செம்பு கலயத்தையும் எடுத்துக்கொண்டு குளிக்கும் இடத்திற்கு வந்து விடவும். உறவுகள் அனைவரும் ஒற்றுமையாக கயைத்தை தண்ணீரில் மூழ்கவுந்து பூக்கள் மேலே மிதக்கும் றையுக்கு தெற்கு முகமாக இரண்டு மும்கடித்து வடக்கு முகமாக ஒரு முறையும் தண்ணீரில் முங்கி வெளியில் வரவும், வீட்டிற்கு செம்பில் தண்ணீர் நிறைய கொண்டு வரவும். வரும்வழியில் ஒரு சங்கும். அவித்த கொள்ளும் தருவார்கள். கொள்ளை சாப்பிட்டுக்கொண்டு ஒத்த சங்கை ஊதிக்கொண்டும் வரவும். வீட்டு வாசலில் வேப்பிலை, மஞ்சள் | கரைத்த தண்ணீர் சட்டி இருக்கும் அதைப்பார்த்து விட்டு வரவேண்டும். கடைசியாக வருபவர் இடது காலால் தள்ளிவிட்டு வீட்டுக்குள் வரவும்.
மூன்றாம் நாள் சடங்கு :
சேகரிக்க வேண்டிய பொருள்கள் தாமரை இலை தேவைக்கு தகுந்தாற்போல், முருங்கைக்கீரை, ரை, தாமரைப்பூ, கச்சகுறிஞ்சா கீரை, தண்டு கீரை தேவைக்கு தகுந்தாற்போல் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். சாம்பாருக்கு காய்கறிகள், இலைகள், அரிசி. பருப்பு, உணவு தயாரித்து கீரையை சுண்டியும், கலனி வைத்தும் தயார் செய்து கொள்ளவேண்டும். இரவு 6.00 மணிக்கு மேல் உறவுகள் ஒற்றுமை ஆனவுடன் வரும் உறவுகளை அமரச்செய்து உணவு அளிக்கவேண்டும். அதில் மாமன். மைத்துனர் ஒரு புறமும். பங்காளிகள் எதிர்புறமும் அமரச்செய்து பரிமாற வேண்டும். பின்பு கொள்ளிவைத்தவர் அவருடைய பங்காளி உதவியுடன் தோளில் துண்டு போட்டுக்கொண்டு ஒரு பக்கத்தில் ஒரு தாமரை இலையை வைத்து மாமன், மைத்துனரிடம் உணவு உருண்டை வாங்கி அதனை பங்காளிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து, கொள்ளி வைத்தவரும் எல்லோரும் உணவு அருந்த வேண்டும். மூன்று குச்சிகள் (பாலை, பலா, புளி) சம அளவில் நறுக்கி முக்காளியாக செய்து ஒரு வெள்ளைத்துணியால் கட்டி எல்லோரும் உணவு அருந்திய பிறகு முக்காளி குச்சியை மூன்று பங்காளிகள் ஒன்று சேர்ந்து முச்சந்தியில் வீசி விட்டு வந்து கையை கழவி விடவும்.
மீதம் உள்ள உறவுகள் சாப்பிட்ட பிறகு பந்தலில் விரிப்பு விரித்து முன்பு சொன்னது போல் மாமன், மைத்துனர் ஒருபுறமாக அமரச்செய்து மறுபுறம் பங்காளிகள் அமரச்செய்து கொள்ளி இட்டவர் பங்காளி ஒருவரின் உதவியோடு இலையை வைத்து வெற்றிலைபாக்குதாமரைபூ, மாமன், மைத்துனரிடம் கொடுத்து வாங்கவேண்டும். வாங்கியதை இறந்தவர் உடல் வைத்திருந்த இடத்தில் வைக்கவேண்டும். விபூதி, குங்குமம் எடுத்துவந்து மாமன், மைத்துனருக்கு தனித்தனியாக பங்காளி ஒருவர் கொடுக்க கொள்ளி வைத்தவர் தனித்தனியாக விபூதி, குங்குமத்தை வாங்கி இறந்தவர் உடல் வைத்திருந்த இடத்தில் வைக்கவும். கொள்ளியிட்டவரும் அவருக்கு துணையாக இருந்தவரும் அந்த இடத்தில் ஒரு ஆடம் ஏற்றி சாமி கும்பிடவேண்டும்.
அதன்பிறகு விபூதி, குங்குமத்தை மாமன், மைத்துனர்களுக்கு பங்காளிகள் கொள்ளிவைத்தவர் மற்றும் குடும்பத்தினர் பூசிக்கொண்டு மாம |கொடுக்கவேண்டும். முன்பு வாங்கி வைத்திருந்த வெற்றிலைபாக்கு, தாமரை ஆசியவற்றை ஒரு தாம்பூலத்தில் வைத்து மாமன், மைத்துனருக்கு கொடுக்கவும். அடுத்த தேவை எப்ப செய்வது என்று முடிவு எடுக்கவேண்டும். இறந்த நேரத்தை கணக்கிட்டு புரோகிதரை அணுகி என்ன நிலைப்பாடு என்பதை தெரிந்து கொண்டு அடைப்பு இல்லை என்றால் விட்டு விடலாம். அடைப்பு இருக்கு என்றார் எட்டாம்நாள் சடங்கு அன்று வள்ளுவனை வரவழைத்து அட்டை தயார் செய்து சுவற்றில் அடிக்கவேண்டும்.
எட்டாம் நாள் சடங்கு :
இறந்தவர் உடல் வைத்திருந்த இடத்தில் இறந்தவரின் புகைப்படம் வைத்து மாலை போட்டு வெற்றிலைபாக்கு, பழம், ஊதுபத்தி கொளுத்தி வைத்து 11.30 மணிக்கு முன்பாக உறவு முறைகள் திண்பண்டங்கள். பழங்கள். சுண்டல். முறுக்கு, ரொட்டி, பச்சை பயறு. புட்டு, அவித்த கடலை போன்றவைகளை கொண்டு வருவார்கள். முதல்நாள் கோட்டை சீர் கொடுத்த உறவுகள் அனைவரும் எட்டாம்நாள் சீர் கொடுப்பார்கள். அனைத்து உறவுகளும் வந்தவுடன் எட்டாம்நாள் சடங்கு நடத்த அனுமதி கேட்பார்கள். அனுமதி கிடைத்தவுடன் அனைத்து உணவுகளையும் படைத்து வைத்து அழும் எட்டாம்நாள் சடங்கு மதியம் 12.00 மணிக்கு நடைபெறும்.
அனைத்து உறவுகளுக்கும் விபூதி, குங்குமம், அரிசி கஞ்சி கொடுத்து படைக்கப்பட்ட திண்பண்டங்கள் கொடுத்து பின்பு சைவ உணவு பரிமாறப்படும் முன்னதாக வீட்டில் போட்டு வைத்திருந்த பாளி சட்டியை நேரங்காலம் பார்த்து மருமகள் தலையில் வைத்து சூரியஒளி படாமல் மைத்துனர் ஒருவர் குடைபிடிக்க சுமங்கலி பெண்கள் நீர் நிலைக்கு எடுத்துச் சென்று மஞ்சள் பூசி
குளித்து விட்டு வீடு திரும்புவார்கள்.
பதினைந்தாம் நாள் சடங்கு :
பெண் இறந்து ஆண் உயிருடன் இருக்கிறார் என்றால் 30-ம் நாள் சடங்கு இல்லை ஆண் இறந்து பெண் இருந்தால் 15-ம் நாள் சடங்கு முடிந்து அன்று இரவு முப்பது நாள் சடங்கு வைத்து கொள்வார்கள். புதன்கிழமை 15 அன்று இரவு முப்பது.
முப்பதாம் நாள் சடங்கு:
அவசியம் புதன்கிழமை இரவு தேர்ந்து எடுத்து இறந்தவர் மனைவியின், தாய் வீட்டுக்கோட்டை கணக்கில் மஞ்சள் தூள், நல்லெண்ணெய், சிகைக்காய், பூ. கதம்பம் வைத்து அந்த பெண்ணுக்கு அன்று இரவு 3.00 மேல் தாலியை வாங்கி பாலில் போடவேண்டும். அமங்களி பெண்கள் அந்த பெண்ணுக்கு சடங்கு செய்யவேண்டும். தாய்வீட்டில் இருந்து கொண்டுவந்த சேலையைக் கட்டிக்கொண்டு முக்காடு போட்டு கிழக்கு முகமாக அமர செய்து சந்தனம், குங்குமம், விபூதி மூன்றையும் தாமரை இலையில் தனித்தனியாக வைத்து அந்த வீட்டு பையன்கள் மருமகள், உறவின்முறை உள்ளவர்கள், அந்த பெண்ணை பார்த்து வணங்கவேண்டும். முதலில் சந்தனத்தை இட்டுக்கொள்ளவும். இரண்டாவது குங்குமத்தை இட்டுக் கொள்ளவும். மூன்றாவது விபூதியை சந்தனத்திற்கு கீழ் பூசிக் கொள்ளவும். அனைவரும் பார்க்கும்போது அமர்ந்து இருந்த பெண் எல்லோரும் 'நல்லா இருங்க நல்லா இருங்க என்று ஆசீர்வாதம்" செய்வார். அதன்பிறகு கருமாதி செய்ய செல்பவர்கள் புறப்பட்டு சென்று விடுவார்கள்.
புதினாறாம் நாள் சடங்கு :
உறவு ஒற்றுமைக்கு இறந்தவரின் ஆண்வாரிசுகள். ச்சு கொடுத்தவர்கள், நீர் நிலைக்கு சென்று புரோகிதரை வைத்து கருமாதி செய்து வரவேண்டும். அதற்கு முன்பாக புரோகிதரை வைத்து வீட்டில் புண்ணியானம் செய்யவேண்டும். நீர் நிலைக்கு சென்றவர்கள் வந்து அருகில் உள்ள சிவன் கோவிலில் ஒற்றுமையுடன் இறந்தவரின் வந்து சாந்தியடைய வழிபாடு செய்து உறவின் முறைப்படி மாமன், மைத்துனர்கள் புது ஆடை, நகை, பணம் வைத்துக் கொடுப்பார்கள், கருமாதி செய்ய நீர்நிலைக்கு சென்று வந்தவர்கள். சிவன்கோவிலில் வந்து சாமிகும்பிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்ப இருக்கிறார்கள் என்ற தகவலை வீட்டிற்கு தெரிவிக்கவேண்டும். வீட்டில் உள்ளவர்கள் சாணி பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் வைத்து வாசலில் வைத்து தேங்காய், பழம், பத்தி பூ. ஆடம். சாம்பிராணி மூன்று இலைகளில் பொங்கல் வைத்து அவர்கள் வந்தவுடன் ஆராத்தி எடுத்து பிள்ளையாரை வணங்கி வீட்டிற்குள் செல்லவேண்டும். பச்சரிசியால் 4 கோடு போட்ட மாக்கோலம் போட்டு அதன்மேல் 8 முழம் வேஷ்டி மாத்து விரித்து நெல்லை தூவி விட்டு அதன்மேல் நடந்து வீட்டிற்குள் வரவேண்டும். வந்தவுடன் மாத்து வேஷ்டியை மடித்து மாக்கோலத்தை ஈரத்துணியால் துடைத்து விடவேண்டும். அனைவரும் விபூதி, குங்குமம் கொடுத்து சாப்பிட அமரச் சொல்லவும். முதலில் இறந்தவரின் வாரிசுகளை சாப்பிட சொல்லி விட்டு மற்ற உறவுகள் சாப்பிட வேண்டும். சாணி பிள்ளையாருக்கு முன்பு 3 இலைகளில் வைத்த பொங்கலை எடுத்து வண்ணார் வீட்டிற்கு கொடுக்கவேண்டும். சாணி பிள்ளையாரை எடுத்து வீட்டின் மேல் உயரமான இடத்தில் வைத்து விட வேண்டும். அனைத்து உறவுகளுக்கும் சைவ உணவு பாயாசத்தோடு பரிமாறப்படவேண்டும்.
எண்ணெய் குளியல்:
உறவுகள் ஒன்று கூடி முடிவெடுத்த நாளில் எண்ணெய் குளியல் நடைபெறும். உறவுகளுக்கு தகுந்தாற்போல் ஆட்டு இறைச்சி சமைத்து பரிமாறப்படும். அந்தவீட்டில் பிறந்த பெண் பிள்ளைகளுக்கு சேலை. ஜாக்கெட் வாங்கி கொடுக்கவும். ஆண் இறந்து பெண் இருந்தால் பிறந்த வீட்டிற்கு அழைத்து சென்று சேலை. ஜாக்கெட் வெற்றிலைபாக்கு கொடுத்து அழைத்து வருவார்கள். 30 நாள் கழித்து இறந்தவர்க்கு வீட்டில் அனைத்து உறவுக்கும் சொல்லி வரவழைத்து தேங்காய், பழம், பால் பலகாரங்கள் வாங்கி வைத்து இரவு 7 மணிக்கு சாமி கும்பிடவேண்டும். உறவுகள் அனைவருக்கும் இரவு சிற்றுண்டி பரிமாறப்படும். ஒரு வருடத்திற்கு பிறகுதான் வீட்டில் சுபகாரியம் செய்யவேண்டும், இறந்த நேரத்தை கணக்கிட்டு ஒரு வருடத்திற்கு பிறகு திதிப்படி தெவசம் கொடுக்கவேண்டும். வருடம் தவறாமல் இறந்தவர்களுக்கு தெவசம் கொடுப்பது நன்மை தரும். ஒரு வருடம் வரை குலதெய்வ கோயில்களுக்கும். மலைக்கோயில்களுக்கும் செல்லக்கூடாது.
|
|
|