கீரமங்கலம் வகை சாதுச் செட்டியார்கள் தலைமைச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது



       ஸ்ரீ அரங்குளலிங்கம் பெரிய நாயகி அம்மன் வரலாறு


வல்லநாடு
வளங்களைத் தன்னுள் அடக்கிய நாடு, வல்லநாட்டும் செட்டியார் ஒருவருக்கு திருமணமாகி ஆண்டுகள் பலவாகியும் குழந்தைபேறு இல்லாமல் தவித்து வந்தார் யார் யாரி என்னென்ன வைத்தியங்கள் சொன்னார்களோ அதையெல்லாம் செய்து பார்த்தார். செட்டியாரின் மனைவி மலடியாகவே இருந்தாள். இனி ஆண்டவனைச் சரணடைவதைத் த வேறு வழியில்லையென்று திருவரங்குள நாதனின் பாதத்தில் சரணடைந்தனர் கணவனும் மனைவியும், கருணைக் கடலான திருவரங்குளநாத்ர் செட்டியாரைச் சோதித்தது போதும் என்று தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் அருளிச்செய்தார் செட்டியரின் மனைவியும் அழகான பெண் மகளை ஈன்றாள். செட்டியாரின் உடம்பு படாத இடம் ஏதும்மில்லை என்னும் அளவுக்கு முழுவதும் அங்கபிரதட்சணம் செய்து ஆண்டவனுக்குத் தன் நன்றிக் கடனைத் தெரிவித்தார். கோயில்

பெண் குழந்தை பெரியநாயகி என்ற பெயருடன் * வளர்பிறைபோல் வளர ஆரம்பித்தாள் பெரிய நாயகி இந்த வீட்டில் பிறந்தாலும், ஊரே அவள் வீடு மாதிரி ஆனது. அவரவரும் அழைத்துச் சென்று சில மணித்துளிகளாவது தத்தம் வீட்டில் இருக்கச் செய்தனர். பெரிய நாயகியும் எல்லோருடனும் அன்போடு பழகி வந்தாள்.

ஒருநாள் செட்டியார் தன் மனைவி மகளுடன் அரங்குளநாதர் ஆலயத்துக்கு வந்தார். கணவனும் மனைவியும் கண்மூடி நெஞ்சுருகி நின்றனர் சன்னிதானத்தில் செட்டியார் வழிபாடு முடிந்து கண் திறந்து பார்த்தால் மகள் பெரியநாயகியை காணவில்லை. மனைவியிடம் கேட்டார். இங்கு எங்காவது தூணில் மறைந்து கொண்டு விளையாட்டுக் காட்டுவாள் என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள்.

தம்பதிகள் தூண் தூணாகத் தேடத் தொடங்கினர். எந்த தூணும் அவளை மறைத்து வைக்கவில்லை. பிரகாரம் வாகன மண்டபம் என அனைத்து இடங்களிலும் தேடினார். பெரியநாயகி இடைக்கவேயில்லை.

பெரியநாயகி! பெரியநாயகி என்ற செட்டியாரின் குரலை வாங்கி அப்படியே எதிரொளித்தது அந்தத் திருக்கோயில், கடைசியாக "அப்பா நான் இங்கு தான் இருக்கிறேன். என்று பதில் கிடைத்தது.

ஆம்! பெரியநாயகியின் குரல்தான் ஆனால் உருவம் அகப்படவில்லை. இங்குதான் இருக்கிறேன் என்று சன்னிதானத்தில் குரல் மட்டும் கேட்டது ஆனால் உருவமில்லை செட்டியாரும் மனைவியும் தவித்துக் கொண்டிருந்தனர்.

என் மகளே நீ எங்கேமா இருக்கிறாய்? செட்டியார் கண்ணீரைக் குரலாக்கினார். மூலவருக்குப் பின்னால் மின்னலைப் பிடித்துச் சிறை வைத்தது போல் ஓர் ஒளி

"பயம் வேண்டாம் உமக்குக் குழந்தை இல்லாததினால் என் நாயகியை உனக்குக் குழந்தையாக பிறக்கச் செய்தேன். இப்போது ஆட்கொள்கிறேன்" இது தான் செட்டியாரின் காதில் அசரீரியாக விழந்த செய்தி. அவளை மீண்டும் என் துணைவியாக

செய்தியை சொன்னகுரல் இதுவரை யாரும் கேட்டறியா குரல். எப்படி இருந்தது என்று சொல்லமுடியாத உணர மட்டும் கூடிய குரல். செட்டியார் புரிந்து கொண்டார். ஆண்டவனின் திருக்குரல் தான் அது.

செட்டியார் ஆண்டவனே தன்னிடம் பேசியதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்தார். காற் றில் ஆடும் தீபம் போல் அவர் மனசு அலைந்தது.

மீண்டும் பெரியநாயகியின் குரல், இப்போது அவள் தெய்வத்திடம் (சிவன்) பேனொள். சுவாமி! என்போன்றவர்களை நீங்கள் ஆட்கொண்ட பின் அந்த குலவம்சம் வளராமல் போய்விடுகிறது. அதனால் என்னை நீங்கள் ஆட்கொண்டபின் எங்கள் வம்சத்துக்கு எந்த தீங்கும் நேரக்கூடாது. என்று தான் பிறந்த குலத்துகாக வாதாடியதையும். உங்கள் வம்சத்துக்கு எந்த தீங்கும் நேராமல் பார்த்துக் கொள்கிறேன். என்று ஆண்டவன் சொன்னதையும் கேட்டு செட்டியார் தம்பதிகள் பிறவிப் பயனை அடைந்தது போல் சந்தோசப்பட்டனர்.

செட்டியார்களின் மருமகன் தான் திருவரங்குளநாதன். அன்று முதல் செட்டியார் குலப் பெண்கள் திருமணமானவர்கள் சுவாமி தரிசனம் செய்யும் போது அரங்குளநாதர் சிவனை மருமகனாக நினைத்து முக்காடு அணிந்து வணங்கி செல்வார்கள்.

புதையல்
அடர்ந்த காடுகளும் அழகிய ஏரிகளும் சூழ்ந்த திருவரங்குளம் பார்க்க ரம்மியமானது. அதன் வடக்குப் பகுதியில் பொறிபனைக் கோட்டை என்றொரு இடம் உண்டு. பறவைக் கூடுகளுக்கு மத்தியில் ரசனையுடன் கட்டப்பட்ட பெரிய பெரிய கோட்டைகள் மனதுக்கு அமைதி கொடுக்கும் விதத்தில் எழுப்பப்பட்டிருந்தன.

சோழமன்னர்கள் அமைச்சர்கள் படைத்தளபதிகள் அங்கு அடிக்கடி வந்து தங்கி மணப்புத்துணர்ச்சி பெறுவது வாடிக்கையானது.

அன்றொரு நாள் அடர்ந்தப் பொற்பனைக் கோட்டையில் கடும் வெயில், வேடண் ஒருவன் கடும்பசியுடன் ஒற்றையடிப் பாதையில் சென்று கொண்டிருந்த போது வானளாவி வளர்ந்து நிற்கும் பனைமரம் ஒன்று அவன் கண்ணில் பட்டது.

ஆவலாய் நிழல் தேடி அதன் அருகே சென்றவன் அதிசயித்தான். தரையெங்கும் பணம்பழங்கள். விலங்குகள் அவன் கண்ணில் சிக்காமல் ஏமாற்றிவிட்டாலும் கடவுள் நம்மை ஏமாற்றவில்லை என்றெண்ணி அந்தப் பழங்களைப் பொறுக்கி மூட்டைகட்டினான். அவைகளை விற்றால் இன்றைய பசி தீருவது நிச்சயம்.

பொழுது சாய்வதற்குள் கலசமங்கலம் என்ற பட்டணம் வந்தான் அந்த வேடன். பெரும் செல்வந்தரான கட்டுடையான் செட்டியார் அங்கு வாணிபம் செய்து வந்தார். அந்த வேடனுக்கு அவர் நன்கு அறிமுகமானவர்.

என்னப்பா சோகமா வர்ற? வேட்டைக்கு எந்த விலங்கும் சிக்கலயா?"

"ஆமாம் செட்டியார் அய்யா என்கிட்ட நிறைய பனம்பழம் இருக்கு. அதுக்கு ஈடா மளிகை சாமான் தருவீர்களா," தயங்கிய அந்த வேடன் கேட்க,

ஓ தாரளமா," என்ற அந்தப் புண்ணியவான் சொன்னதைச் சென்னபடியே செய்தார்.

அதன் பின்பு வேட்டைக்கு எந்த விலங்கும் சிக்காத போதெல்லாம் வேடன் கவலைப்படுவதில்லை பணம்பழங்கள் செட்டியார்தயவில் மளிகை சாமான்களாயின.

ஒருநாள் அமைச்சருடன் சோழ மன்னர் வந்து பொற்பானைக் கோட்டையில் தங்கினார். வல்லநாட்டுச் சமீபம் உள்ள ஊரில் இருந்து இடையன் ஒருவன் அதுமாதிரியான சமயங்களில் நுரை ததும்ப ததும்ப பால் கொண்டுவந்து மன்னருக்கு கொடுப்பான்.

அந்த இடையன் பால் கொண்டு வரும் காட்டு வழியில் ஒரு மணல்மேடு இருந்தது. தினம் அவன் பால் கொண்டு வரும்போது சொல்லிவைத்த மாதிரி அந்த மணல்மேட்டில் கால் இடறிப் பால் சொம்பு தளும்பி விடும். கொட்டிய பால் போக மீதம் பால்தான் மன்னருக்குப் போகும்

ஒரு நாள் கால் இடறியதும் கடும் சேதம் பூண்டு இரத்தம் கொட்டியது. அந்த் இடையன் கோபத்துடன் அந்த மணல் மேட்டை மண்வெட்டி கொண்டு வெட்டினான் வெட்டிய இடத்திலிருந்து இரத்தம் பீறிட்டது.

மறுகணமே அந்த இடத்தில் சுயம்புலிங்கம் தோன்ற ஒரு கூட்டமே கூடிவிட்டது.

அங்கு வந்த ஒரு நெசவுத் தொழிலாளி ஒருவன் புதுவேட்டி ஒன்றை சுயம்புலிங்கம் மேல் சாத்தினான்.

தாமதமாகப் பால் கொண்டு வந்த இடையன் அன்று மன்னர் கோபத்துக்கு ஆளானான். பெரிசுக்கு அந்த வேடவவனை அழைத்து வந்திருந்தும் பயனில்லை.

பிறகு நடந்த நிகழ்ச்சியை மன்னரிடம் இடையன் கூற மன்னரும் ஆச்சரியப்பட்டு போனார்.

வேடன் கையில் இருந்த பனம்பழம் மன்னர் கவனம் கவர

அது என்ன? என்ற கேள்வியை அவன் உதடு உச்சரித்தது. பணம்பழம் மன்னர் அவர்களே சிரம் தாழ்த்தி வேடன் சொல்ல வாங்கிப் பார்த்தார் மேலும் ஆச்சரியப்பட்டார். அது தங்கப் பனம்பழம்.

வேடனே! உண்மையைச் சொல்லும், தங்கப் பனம்பழம் உனக்கு எங்கே கிடைத்தது? மன்னர் மன்னருக்கே உரிய அதிகாரத்துடன் கேட்டார்.

வேடனுக்கு அப்போதுதான் அது தங்கப் பனம்பழம் என்ற செய்தி தெரிய வருகிறது. மன்னரை அழைத்துக் கொண்டு அந்த ஒற்றையடிப் பாதை அருகே வர இதுநாள் வரை வேடனுக்குப் பழம் தந்த அந்தப் பனைமரம் மாயமாய் மறைந்து விட்டது. "மன்னரே இங்கு கிடைக்கும் பழங்களைக் கலசமங்கலத்தில் வசித்து வரும் கட்டுடையான் செட்டியாரிடம் கொடுத்து அன்றாடத் தேவையான சாமான்களை வாங்கிக் செல்வேன். எனக்கு வேறு ஒன்றும் தெரியாது" என்றான் பயந்தபடியே. மன்னர் கட்டளையிட அநதக் கட்டுடையான் செட்டியார் கரம் கட்டி முன் நின்றார். மறுப்பேதும் சொல்லாத செட்டியார் தங்கப் பனம்பழம் தன்னிடம பத்திரமாக இருப்பதாகச் சொன்னார்.

செட்டியாரே மிக்க சந்தோஷம் அந்த சுயம்புலிங்கம் தோன்றிய இடத்தில் கோவில்கட்ட வேண்டும் என்ன சொல்றீர்கள்? என்று மன்னன் கேட்க, "ஆமோதிக்கிறேன். மன்னா" என்று முழுமனத்தோடு தன் சம்மதம் தெரிவித்தார்.

கோயில் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தன. அஸ்திவாரத்தில் ஆரம்பித்த பணி திருக்குடமுழுக்கு வரை சிறப்பாகச் சென்றதற்கும் காரணம் நம் செட்டியார் மக்களின் உழைப்பும் வியர்வையும் தான்.

சுட்டுடையான் செட்டியாரிடம் இருந்த நான்யாயிரத்து இருநூறு தங்கப் பனம்பழங்களில் மூவாயிரம் பனம்பழங்கள் கோயிலின் கோபுரமாகவும் பிரம்மாண்டமான தூண்களாகவும் கதைகளாகவும் சிற்பங்களாகவும் விக்கிரஹங்களாகவும் உருமாறின. கட்டுடையான் செட்டியார்வசம் ஆயிரத்து இருநூறு பழங்கள் மீதமிருந்தன. என்ன செய்வது என்று கேட்ட செட்டியாரிடம் மன்னன், செட்டியாரே இது அரசுக்குச் சொந்தமானதாக இருந்தால் அரசவையில் சேர்க்கலாம். உனக்குச் சொந்தமானதாக இருந்தால் நீயே கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது ஆண்டவனைச் சேர்ந்தது என்பதால் ஆண்டவன் காலடியிலேயே சேர்த்து விடுங்கள் அது பிற்காலத்தில் அவனுடைய திருப்பணிக்கே பயன்படட்டும். என்று மன்னர் சொன்னதன் பேரில் ஆயிரத்து இருநூறு பழங்களும் பீடத்துக்கு அடியில் புதைக்கப்பட்டு அதன்மேல் மூலவர் நிறுவப்பட்டார்.

(அந்த புதையலின் இன்றைய மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய்), திருக்குடமுழுக்கு விழா பொதுவாக அந்தநாளில் இது பேன்ற விழாக்களில் குறிப்பிட்ட மன்னன் மட்டுமே வருவான். ஏனைய மன்னர்கள் வரமாட்டார்கள். ஆனால் நம் செட்டியார்களால் நிறுவப்பட்ட இந்தக் கோயிலின் குடமுழுக்குக்கு சேரன், சோழன் பாண்டியன் என தமிழகத்தின் அனைத்து மன்னர்களும் வருகை தந்து வரலாற்றில் சிறப்பான சம்பவமாக இன்றும் போப்படுகிறது.

மன்னர்களை வரவேற்று முதல் மரியாதை செய்வதிலிருந்து தேரில் ஏற்றி வழி அனுப்புவது வரை நம் செட்டியார் மக்கள் ஆர்வத்தோடு செயல்பட்டனர்.

குடமுழுக்கு விழாவுக்கு வந்த மன்னர்கள் சுவாமிக்கு அரங்குளநாதர் என்றும் ஊருக்குத் திருவரங்குளம் என்றும் பெயர்வைத்து விழாவினைச் சிறப்புப் பொங்க நடத்தினர்.

நம் செட்டியார்களின் வரலாற்றுக்கு ஒரு சாட்சியாகவும் சாட்சிக்கு ஒரு வரலாறாகவும் அரங்குளநாதர் ஆலயம் இன்றும் வானளாவி ஓங்கி உயர்ந்து நின்று நம்மைப் பெருமையடையச் செய்கிறது.