நம்முடைய (கீரமங்கலம் செட்டியார்கள்) வரலாறு
ஆதி முதல் நாம்:
குடநாடு, சேர நாட்டின் ஒரு பகுதி (இன்றைய கம்பம் அதை சுற்றவுள்ள பகுதிகள்). சுமார் 1880 ஆண்டுகளுக்கு முன் . இரண்டாம் நூற்றாண்டு ஓர் இனிய நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது. அந்த அதிசயம் தான் "சிலப்பதிகாரம்" உலகிற்குத் தந்தது.
இன்றைய தமிழகமும் கேரளவும் சேரும் வளமான பகுதி. பசுமையான நீண்ட மரங்கள் தெளித்து வனைந்து வேகமாக ஓடும் நதிகள் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் அருவிகள் கூட்டை நோக்கிச்செல்லும் பறவைகள் இவையனைத்தும் மஞ்சள் திரு மாவை லெலிலில் தங்கமாகத் தகதகத்துக் கொண்டிருந்தது.
எப்போது கோடி மின்னல் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் வந்தது போல் வானத்தில் னிப் பானத்தில் ஒரு மிளவு பிளவில் இருந்து வெளிப்பட்ட சற்றே நீலம் கலந்த வெள்ளை ஒளி கற்றைக் கற்றைவாக பூவிலை நோக்கி பத்து சூரியன் ஒரே நேரத்தில் உதித்தது கோன்ற ஒளி பிரணவம் ஆனால் அதில் வெப்பம் ைெடவாது குரூமை இதுமான குரூமை
அந்த தனிகமுறைக்கு இடையே மிதந்து வந்தது அந்த வானாதம்அந்தனரதன் பூமியில் வந்து இறக்கிது குளத்தில் பிறந்து, தன் பண்பதன் கற்பா தன் தலத்தால், தன் உணர்தன் குல தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல தேவாதி தேவர்கள் நேரில் வந்திருந்தார்கள் கண்ணகியின்
விருப்பப்படியே அவர்கள் கண்ணகியின் கணவன் கோவலனுக்கு உயிர் கொடுத்து, கண்ணகியையும் கோவலனையும் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்.
இன்று உலகமே கற்புக்கு உதாராணமாக கூறும் கண்ணகி, வேறு யாருமல்ல நம்மவன், ஆம்! கண்ணகி நம் குலத்தில் பிறந்தவன். கண்ணகி தேவதையின் உடம்பில் ஓடிய இரத்தம் தான் இன்று நம் உடம்பிலும் ஓடுகிறது. கண்ணகி கோவலன், மணிமேகலை, பிற்காலத்தில் பட்டினத்தார், காரைக்கால் அம்மையார் போன்றவர் சிவநேச வணிகர் குலத்தில் பிறந்தவர்கள். சிவநேச வணிகர் குலம் என்பது நம் முன்னோர்களின் குலம் ஆகும். அவர்கள் காவிரிபூம்பட்டினத்தை மையமாக வைத்து வாழ்ந்து வந்தார்கள். தொழில் வியாபாரம் அன்றைய இந்தியாவின் துறைமுக நகரமாக விளங்கிய காவிரிபூம்பட்டிணத்தில் (வரலாறு மற்றும் பழம் இலக்கியங்களில் புகார் நகர் என்றும் இன்று பூம்புகார் என்று அழைக்கப்படுகிறது) வாணிபம் செய்தார்கள். "திரைகடலோடியும் | திரவியம் தேடு என்ற சான்றோர் வாக்கு போல் நம் முன்னோர்கள் கவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கடல் வழியாக அயல் நாடுகளுக்கு சென்று வாணிபம் செய்து வந்தனர். குறிப்பாக பாபிலோனியா > நாடுகள் (இன்றைய அரேபிய நாடுகள்) எகிப்து போன்ற நாடுகளுக்கு துணி, முத்து வகைகளும், ஜாவா, சுமத்திரா போன்ற நாடுகளுக்கு வாசனை திரவியங்களும் சென்று விற்பனை செய்துவந்தனர். சிறப்பான வாணிபம் செய்வதால், செல்வச் சிறப்போடு கோபுரங்களிலும் மாளிகைகளிலும் வசித்து வந்தனர். வெளிநாட்டவருக்கு காவிரி பூம்பட்டினம் வியாபாரச் சந்தையாக திகழ்ந்தது.
கிபி இரண்டாம் நூற்றாண்டில் (சிலப்பதிகாரம் காலம்) சுமார் 2500 தலைக்கட்டுகள் வைசியர்கள் என்றழைக்கப்படும் சிவநேச வணிக குடும்பங்கள் அங்கு இருந்ததாக கருதப்படுகிறது.
நம் முன்னோர்கள் தீவிர சைவர்களாக ாக (சிவனை வழிபடுபவர்களாக) இருந்திருக்கிறார்கள். அவர்களின் குல தெய்வம் முக்கிளாலிங்கேசவர் முக்கிளாலிங்கேசுவர் என்பது பிரம்மா, விஷ்ணு, உருத்திரன்(சிவன்) என்ற மூன்று தெய்வங்களையும் தன்னுள் கொண்ட ஈஸ்வரன் என்று கருதப்படுகிறது.
பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலையில் நம் முன்னோர்களையும் பெருமைகளையும் மிகுந்த சிறப்பாக கூறப்பட்டுள்ளது. அவையனைத்தையும் எழத வேண்டுமானால் தனி புத்தகம் போட வேண்டும். குறிப்பாக சொல்லதானால் உலகப் பொது மறையாம் திருக்குறளில் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதோ அதை அப்படியே செய்தும், எதை செய்யக்கூடாது என்று கூறியுள்ளதோ அதை தவிர்த்தும் சிறப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்து இருக்கின்றனர்.
இன்று நம்மிடையே கரைகள், புரங்கள் இருப்பது போன்று அந்நாளில் மூன்று (3 புரங்கள்) பிரிவுகள் இருந்தன. அவை 1. மரகதப் பிள்ளையார்புரம் (முதல் தலைவர்) 2. மாணிக்கக் கிரீடம்புரம் (இரண்டாவது தலைவர்) 3. தங்க மரக்கால்புரம் (மூன்றாவது தலைவர்) என்பதாகும். ஒவ்வொரு புரத்தில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் தலைமையின்கீழ் ஒன்றாக செயல்பட்டனர். நம்மவர்களின் ஒவ்வொரு திருமணவிழாவில் மூன்று புரங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அன்றைய சோழப்பேரரசு உறையூரை ஆட்சி தலைநகராகவும், கவிரிபூம்பட்டினத்தை வணிகத்தலைநகராகவும் கொண்டிருந்தது. மேலும் சோழப்பேரரசு பெரும் நிலப்பகுதியைக் கொண்டிருந்ததால் பேரரசு பல ராஜ்யமாக பிரிக்கப்பட்டு, இளவரசர்களும், பேரரசரின் நெருங்கிய உறவினர்களும், குறுநில மன்னர்களும் அதை ஆட்சி செய்து வந்தனர். அது போல் பிரிக்கப்பட்ட ஒரு ராஜ்யத்தின் தலைநகராக விளங்கயிது திருவிடை மருதூர், கரிகால் சோழன் என்பவன் அதை திறம்பட ஆண்டு வந்தான். தன் மனைவியை இழந்து தண் ஒரே மகளையும் பிரிந்த கரிகாலன் தனக்குப் பின் தன் ராஜ்யத்தை ஆள வாரிசு இல்லையே என்ற கவலையடைந்த போது, அவனது மந்திரிகளும், குருமார்களும், பெரியவர்களும், தங்கள் காவிரி பூம்பட்டினத்தைச் சேர்ந்த வைசியர்களில் உயர்ந்த குலமான சிவநேச வணிகர்கள் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்வது மூலம் அழகு; ஆற்றல் நற்குணம் கொண்ட வாரிசு உருவாக முடியம் என்று அலையோர் கூற, அதை ஆமோதித்தான் சோழன்.
கரிகால் சோழனின் உத்தரவுப்படி தலைமை மந்திரி நேரில் காவிரிப்பூம்பட்டினம் சென்று நமது குல முதல் தலைவரைச் சந்தித்து அரசரை அவர் சந்திக்க வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நமது முதல் தலைவர் கரிகாலச் சோழனை சந்தித்தார். கரிகாலன் அவரை வரவேற்று, நான் காவிரி பூம்பட்டினம் வணிகர் குலத்தில் தோன்றிய ஓர் அழகிய பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்' என்றார்.
கரிகாலன் நம் குலத்தில் பெண் கேட்டது ஏன்?
மனைவியை இழந்த கரிகால் சோழன் தன் ஒரே மகளை பொற்கைகளுக்குள் வைத்து வளர்த்து வந்தான். அவள் அழகுப்பதுமையாக தெய்வீக அம்சம் பொருந்தியவளாகவும் வளர்ந்து வந்தாள். மகள் திருமண வயதை அடைந்தபோது, கரிகாலன் எல்லாவிதத்திலும் சிறப்பான ஒருவனை மாப்பிளையாகத் தேடினான அப்போது மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு வரகுணபாண்டியன் என்ற இளைஞன் ஆண்டு வந்தான் அவனுக்கு தன் மகளைத் திருமணம் செய்துவைக்க எண்ணிய கரிகாலன்
பாண்டிய நாட்டுக்குத் தூது அனுப்பினான். மிகப்பெரிய சிலைத்தொண்டனாகவும், மீனாட்சி அம்மாளின் பக்தனாகவும், விளங்கிய வரகுண பாண்டியன். அவனுடைய தவக வலிமையால் அவ்வப்போது அம்மாள் நேரில் தோன்றி தரிசனம் தந்து கொண்டிருந்தாள். வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்யாமல் தெய்வக் காரியங்களில் ஈடுபடவேண்டும் என்று எண்ணினான்.
ஆனால் சோழப்பேரரசு தன் மேல் வைத்திருந்த மதிப்பாலும், அன்பாலும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான். ஒரு நன்னாளில் மிகவும் சீரும் சிறப்பாகத் திருமணம் நடந்தது. முதலிரவு மஞ்சத்தில் அமர்ந்து மணப்பெண்ணுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அம்பாளை வேண்டலாம் என்று வேண்ட ஆரம்பித்தான் வரகுண பாண்டியன். அப்போது அங்கே கால் சலங்கை ஒலிக்க வந்து நின்றாள். மணப்பெண் சலங்கை ஒலியால் கண் விழித்துப் பார்த்த பாண்டியன் தன் எதிரே அம்மாள் வந்து நிற்பதாக உணர்ந்தான். உடனே அவள் காலில் விழந்து வணங்கி பக்திப்பாடல்களைப் பாட ஆரம்பித்தான். ஒன்றும் புரியாத மணப்பெண் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அதைக்கண்ட வரகுணபாண்டியன் அம்மையே நீ மானிடப்பெண் அல்ல, வெப்பெருமானுக்கு (மருதவாணன்) உரிமையானவன், நான் அந்த மருத வாணனிடமே உன்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன் என்று கூறி அவளது வலது கையை பிடித்து கோவிலுக்கு அழைத்து சென்று, கோவிலில் விட்டு விட்டு தவம் புரிய காவிரிக்கரை நோக்கச் சென்றான். இவையனைத்தையும் அறியாத சோழ அரசனும் அந்தப்புரமும் புதுமணப்பெண் மாப்பிளையின் வருகைக்காகவும் நீராட வைப்பதற்காக ராஜஉபச்சாரத்துடன் காத்திருந்தனர். வெகுநேரமாகவும் அறையில் இருந்து எவ்வித சலனம் இல்லாமல் இருப்பதைக் கண்டு கதவைத் திறந்து பார்க்க அங்கே வைத்தது வைத்தபடியே இருக்க பெண் மாப்பிள்ளையை மட்டும் காணவில்லை.
விவரம் கேள்விப்பட்ட கரிகாலன் மிகுந்த கோபம் உடையவனாக ஆனான். அவர்களைத் தேட ஆட்களை எட்டு திக்கும் அனுப்பிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த மருதவாணன் கோவில் குருக்கள் அரசனிடம் கோவிலின் பிரதான லிங்கத்தின் அருகில் நகைகளுடன் கூடிய இளவரசியின் வலதுகை மட்டும் இடக்கிறது. என்று கூறினான் அரசனும் மற்றவர்களும் கோவிலில் சென்று பார்த்து இளவரசியின் வலதுகை மட்டும் தனியாகக் கிடப்பதைக் கண்டு துணுக்குற்று, வரகுணப்பாண்டியன் கதி வேலை யாகத்தான் இருக்கும் அவன் எங்குருந்தாலும் சுட்டி இழுத்து வாருங்கள் என்று உத்திரவிட்டான். அதன்படி தளபதியின் தலைமையில் சென்ற படை, காவிரிக் கரையில் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்த வரகுண பாண்டியனை மன்னனிடம் இழுத்து வந்தார்கள், வரகுண பாண்டியனைக் கண்ட கரிகாலன் அலனைத் தரதரவென்று மருதவாணர்(சிவன்) கோவிலுக்கு கூட்டி வந்து,
அங்கே கிடந்த இளவரசியின் கையைக் காட்டி, "என் மகளை என்ன செய்தாய் என்று கோபமாக விளாவினான். அதற்கு பதில் அளிக்காமல், நேராக மருதவாணனை (சிவன்) பார்த்துப்பேச ஆரம்பித்தான் வரகுணபாண்டியன்.
என்னப்பா மருதப்பா, ஏனப்பா இந்த விளையாட்டு? நான் தீண்டிய கை என்பதால், நீ வலதுகையை ஏற்றுப் கொள்ள வில்லையா? தாயின் கையைப் பற்ற பிள்ளைக்கு உரிமையில்லையா? சிவ பக்தனை இப்படியெல்லாம் நீ சோதிக்க லாமா? என்று கண்ணீர் விட்டுக் கதறினான். உடனே மருதவாணனின் அசரீரி வரகுண பாண்டியா, உன் பக்தியை உலகமறியவே இந்த விளையாட்டு, என் தேவியை கரிகாலன் மகளாகப் பிறக்கச் செய்து, அவளை உனக்குத் திருமண செய்து வைத்தேன். உன் பக்தியை மெச்சினோம் என்று அசரீரியும், பிரகாசமான ஒளியும் மறைய, இளவரசியின் வலது கையும் உள்ளே இழத்துக்கொண்டது. அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கரிகால சோழன், தனக்கு தேவியே மகளாகப் பிறந்தது எண்ணிப் பெருமிதம் அடைந்தான். வரகுண பாண்டியனை வாழ்த்தி அனுப்பினான். அதன் பின் தான் தனக்குப்பின் வாரிசுவேண்டும் என்று நம் குலத்தில் பெண் கேட்டது.
இதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த முதல் தலைவர் இந்த விஷயம் நான் மட்டும் முடிவுச் செய்யக் கூடியது அல்ல, அதனால் மற்ற இரு தலைவர்களையும் கலந்து பேசி உங்களுக்கு விரைவில் நல்ல முடிவு சொல்கிறேன். என்று விடைபெற்றுச் சென்றார்.
வரலாற்று குழப்பங்கள்
சோழப்பேரரசையும், சோழப் பேரரசின் ராஜ்யங்களையும் கரிகாலன் என்ற பெயரில் மட்டும் ஏறக்குறைய பத்து பேர் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இதில் கரிகால் பெருவளத்தான் எனப்படும் புகழ் பெற்ற மன்னன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்திருக்கிறான். அவன்தான் சிங்களத்தை (இலங்கை) வென்று அங்கிருந்து 25000 பேர்களை அடிமைகளாகத் தமிழககத்திற்கு கூட்டி வந்து கல்லணையைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. (பின்னாளில் கல்லணை பல அரசர்களால் சீரமைக்கப்பட்டது). அதே போல் 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராஜராஜ சோழனுடைய உறவுமுறை அண்ணன் பெயர் ஆதித்திய கரிகாலன். இராஜராஜ சோழனுக்குப்பிறகு சோழ நாட்டை ஆண்டு குலோத்துங்க சோழனை こち கல்வெட்டுக்களில் கரிகால சோழன் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நம் குலத்தில் பெண் கேட்ட கரிகாலன் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடும் என்று தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகமும் 11- 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாக இருப்பான் என்று வல்ல நாடு சமூக வரலாறும் கூறுகிறது. 1000, 2000 ஆண்டுகள் பின்னோக்கி சென்று வரலாறு தேடும் போது இது
போன்ற குழப்பங்கள் இயற்கையே எடுத்துக்காட்டாக தஞ்சைப் பெரிய கோவிலை 10 ம் நூற்றாண்டில் ராஜராஜசோழன் கூட்டியதாகப் படித்திருக்கிறோம். அதையே தீவிரமாக நம்புகிறோம். ஆணால் 7-ம் நூற்றாண்டு இலக்கியத்திலேயே தஞ்சை கோவிலைப் பற்றி புகழ்ந்துப் பாடப்பட்டுள்ளது. ஆக முன்பே அங்கு கோவில் இருந்து அதைப் பெரிய கோவிலாக ராஜராஜசோழன் கட்டி இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்
புகார் நகரில் கூட்டத்தைக் கூட்டி மன்னனின் கோரிக்கையை அவர்களிடம் சொன்னார். முதல் தலைவர். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மிகுந்த கட்டுப்பாடுடன் இருந்த நம் வணிகர்கள், இதை நம் குலத்திற்கு ஏற்பட்ட இழுக்காகக் கருதினர். வேறு குலத்தைச் சார்ந்த ஒருவனுக்கு அது மன்னனாக இருந்தாலும் தங்கள் குலத்துப் பெண்ணைக் கொடுப்பதில்லை என்று முடிவு செய்தனர். ஆனால் மன்னனைப் பகைத்துக் கொண்டு அவன் ராஜ்யத்தில் இருப்பது ஒருபுறம், தங்கள் குலத்தின் மானத்தைக் காக்க வேண்டியது ஒரு புறம். கடைசியில் சீரும் சிறப்புமாக இருந்த நமது சொந்த மண்ணை விட்டு வேறு ராஜ்ஜியத்தில் குடும்பம் குடும்பமாக குடியேறுவது என்று முடிவு செய்தார்கள். சோழப்பேரரசின் தென்மேற்கு, பாண்டியன் ராஜ்யத்தின் எல்லையின் அருகில் இருந்தது வல்லநாடு, அம்பு நாடு. அதை குறுநில மன்னர்கள் (நாட்டார்கள்) ஆண்டார்கள். அங்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அனைவரும் ஒரே நாளில் காலி செய்தால் மன்னனுக்குத் தெரிந்துவிடும் என்பதால், குழு குழுவாகப் பிரிந்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூன்றாவது குழுத் தலைவர் சார்பில், இரவோடு இரவாக தங்கள் தலையில் சுமக்கும் அளவுக்கு நவரத்தினங்கள் வாசனைத் ரிவியங்கள் பொருட்களை சுமந்து ஒரு பிரிவினர் புகார் நகரத்தை விட்டுக் கிளம்பினர். நான்கைந்து நாட்கள் கழித்து இரண்டாவது தலைவர் தலைமையில் மற்றோடு பிரிவினர் கிளம்பினர்.
|
|
|